உலக புத்தக தினத்தை முன்னிட்டு நம் பதிப்பகம் அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தது.
வயது வாரியாக குழந்தைகளை நான்கு பிரிவுகளாக பிரித்து ஓவியப்போட்டி, கதை சொல்லுதல், கதை எழுதுதல் ஆகிய வகைமைகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 1200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்து வகைமையிலும் பிரிவுகளில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு புத்தகப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தோம்.
0 Comments